பும்ராவை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. வெற்றிக் கனியை ருசிக்க காத்திருக்கும் பெங்களூர்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 28, 2019 07:29 PM

 

ab de villiers says about ipl matches and bumrah

ஐ.பி.எல். தொடரின் 7-வது போட்டி இன்று நடைபெறுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்திய அணியும் மோதுகின்றன.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் முதல் போட்டியில் மோதிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 70 ரன்களில் சுருண்டது. இதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இதனால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இரு அணிகளும் மோதுகின்றன. சொந்த மண்ணில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெல்வது கடினம் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து தெரிவித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரரான 'டி வில்லியர்ஸ், எனக்கு ஒவ்வொரு போட்டியையும் விளையாடுவது கடினம் தான். நீங்கள் பலத்துடன் விளையாட விரும்புவீர்கள். பின்னர் களைத்துப் போய்விடுவீர்கள். இங்கு யாரும் மிகச் சிறந்த வீரர்கள் அல்ல. பும்ரா ஒரு நல்ல பௌலர். ஆனால் அவரை இந்தப் போட்டியில் சற்று நிறுத்தி வைத்தே பந்து வீச அனுப்புவார்கள்.'  என்று அவர் கூறியுள்ளார். 

'சின்னசாமி கிரிக்கெட் மைதானம் சிறியது என்பதால் அனைத்து பௌலர்களும் இங்கு சற்று அழுத்தத்துடன்தான் விளையாடுவார்கள்' என்று தெரிவித்துள்ளார். மிகப் பெரிய வீரரான டி வில்லியர்ஸ் இவ்வாறு கூறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.