நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன்! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Mar 27, 2019 08:25 PM

 

TN CM gives massive reply to dmk chief stalin in his election speech

தென் சென்னை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து கந்தன்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர், காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்.பிக்கள் நாடளுமன்றத்தை முடக்கினார்கள் என்றும், ஆனால் திமுக எம்.பிக்கள் நாடளுமன்றத்தில் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.மு.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தி.மு.கவை சாடினார்.

இந்நிலையில், ஸ்டாலின் தனது தந்தையின் மூலம் தி.முகவின் தலைவர் ஆனவர் என்றும், ஆனால் தான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே சிலைக்கடத்தலை தடுக்க தனி பிரிவை அமைத்துவிட்டார் என்றும், இது தொரியாமல் ஸ்டாலின் தனி பிரிவை உருவாக்க வேண்டும் என்று கூறுவது சிரிப்பாக உள்ளது என்று ஸ்டாலினை சரமாரியாக தாக்கி பேசினார்.