கனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு! திமுகவினர் அதிர்ச்சி! காரணம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Arunachalam | Mar 27, 2019 08:32 PM
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மேலும், தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி என 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
அதில், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்புமனுவில் உள்ள பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால், இவரது வேட்பு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.