காடுவெட்டி குருவை நினைத்து மேடையில் கண்கலங்கிய ராமதாஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Mar 27, 2019 07:54 PM

 

ramadoss cried in the memory of guru during his speech in chidambaram

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசியவர், இந்த தோ்தலில் பிரசாரம் செய்வதற்கே கஷ்டமாக உள்ளது. என்னுடைய மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் சிதம்பரம் மக்களவைத் தொகுதிப் பக்கமே வரவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. குருவே வேட்பாளரை வெற்றி பெறவைத்திருப்பார் என்று பாமக நிறுவனா்  ராமதாஸ் மேடையிலேயே கண்கலங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில் திருமாவளவன், பெண்கள் காதுகொடுத்துக் கேட்க முடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி வருகிறார். மேலும், 100 இளைஞா்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார். தற்போது அவரிடம் 100 இளைஞா்களைக் கொடுத்தால் என்ன செய்வார் என்பது  உங்களுக்கே நன்றாக தெரியும்.

இந்நிலையில் இவரது கட்சி அகற்றப்பட வேண்டும். திருமாவளவனை வளா்த்துவிட்டதே நான் தான். ஆனால், இப்படி சமூகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவில்லை.எனவே அதிமுக வேட்பாளா் சந்திரசேகரை எதிர்த்து நிற்கும் திருமாவளவனுக்கு சிதம்பரம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் கொடுக்கும் பரிசு டெபாசிட் இழக்கச் செய்வதே என்று கூறினார்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #RAMADOSS #CHIDAMBARAM