VIDEO: 'பிறந்து' 8 வாரம் கூட ஆகல!.. பச்ச 'குழந்தை' செய்ற வேலையா இது? ஆச்சரியத்தில் பெற்றோர்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 27, 2020 10:05 AM

இங்கிலாந்தில் பிறந்து 8 வாரங்களே ஆன நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று ஹலோ என்று தன் தந்தையை பார்த்து கூறுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

world\'s youngest talking baby says hello in 8 weeks videoviral

இங்கிலாந்தின் Cheshire பகுதியைச் சேர்ந்த  Nick , 36 மற்றும்  Caroline, 37 தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைதான் தற்போது வைரலாக மாறியுள்ளது. 

குழந்தை John Taylor-Mullington-ஐ, தந்தை நிக் தனது மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்துள்ளார். அப்போது  குழந்தையை இவ்வுலகிற்கு வரவேற்கும் விதமாக குழந்தையை பார்த்து ஹலோ என்று கூறுகிறார் நிக். அப்போது தனது தந்தைக்கு மீண்டும் குழந்தை பதில் சொன்னதுதான் பெரிய ஆச்சர்யம். ஆம் குழந்தை மீண்டும் தனது தந்தைக்கு பதில் சொல்லும் விதமாக காற்றில் பேசுவது போல் அழகாய் ஹலோ என்று மழலை குரலில் பேசுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுவாகவே குழந்தைகள் பேசுவதற்கு அதிக மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதும் அப்படியே பேசினாலும் பெற்றோர் பேசியதை திரும்ப பேசுவதற்கு 10 முதல் 14 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிறந்து எட்டு வாரங்களில் குழந்தை இப்படி தந்தையை பார்த்து ஹலோ சொல்வது ஆச்சரியம் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவிப்பதுடன், இந்த வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. World's youngest talking baby says hello in 8 weeks videoviral | World News.