'நம்பி குழந்தையை அனுப்பிய தோழி'... 'கணவருடன் சேர்ந்துகொண்டு'... 'பெண் செய்த அதிரவைக்கும் காரியத்தால் பரபரப்பு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் தோழியின் ஒரு வயது குழந்தையை கடத்தி சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நவிமும்பை தலோஜாவை சேர்ந்த தம்பதி இப்ராகிம் - ரேஷ்மா. இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், நேற்று காலை மும்பை குர்லாவில் வசிக்கும் ஒரு தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த தோழியின் ஒரு வயது குழந்தைக்கு புதிய ஆடை மற்றும் சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி இப்ராகிம் குழந்தையை வெளியே அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் இப்ராகிம் திரும்பி வராததால் அவருடைய மனைவி ரேஷ்மாவும் அவர்களை தேடி அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு ரேஷ்மாவும் வெகுநேரமாக திரும்பாததால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாய் அவர்களை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் செல்போனைத் தேடியபோதுதான் வீட்டிற்கு வந்த ரேஷ்மா செல்போனையும் திருடி சென்றுவிட்டது தெரியவந்துள்ளது .
இதுகுறித்து உடனடியாக குர்லா போலீசில் குழந்தையின் பெற்றோர் புகார் அளிக்க, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி மால்வாணியில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
