“திடீர்னு இப்படி பண்ணிட்டாளே!”.. கதறி அழுத தந்தை.. திருமணமான நபரை காதலித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி உண்மை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த முருகன் என்கிற 42 வயது நபரின் மகள் தவமணி.
![Theni father Killed his college going daughter who loved a married man Theni father Killed his college going daughter who loved a married man](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/theni-father-killed-his-college-going-daughter-who-loved-a-married-man.jpg)
தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த தவமணி தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரம் தெரிந்து முருகன் தவமணியை கண்டித்ததாகவும் அதன் பிறகும் தவமணி அந்த நபருடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த முருகன் தவமணிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தவமணி தனது குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமான முருகன் தவமணியை அடித்தது மட்டுமன்றி துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். இதனையடுத்து மூச்சு திணறி வீட்டிலேயே தவமணி உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால் தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் சொன்ன முருகன் தவமணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்.
எனினும் முருகனின் நாடகம் குறித்து சந்தேகத்தை மக்கள் போலீசாருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் முருகனை விசாரித்து அவர் செய்த நாடகத்தை கண்டு பிடித்தனர். மேலும் முருகனும் தவமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய தந்தை முருகனை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)