'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்...! 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரண்டு கோடி சொத்திற்காக பெங்களூரில் 45 வயதான பெண்மணியை கணவரும் மகனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுரில் கீதா என்னும் 45 வயது பெண்மணி ஒருவர் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் மூன்று பியூட்டி பார்லர்களை நடத்தி வருக்கிறார். இவர் தன் கணவர் அஞ்சனி (55) மற்றும் அவரது மகன் வருண் (26) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் கீதா அவர்களின் மங்கமணபல்யா இல்லத்தில் கொலை செய்யப்பட்டதாக டெக்கான் ஹெரால்ட் (டி.எச்) தெரிவித்துள்ளது.
கீதாவின் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கீதாவை கொலை செய்ய வந்த ஒப்பந்தக் கொலையாளிகள் வீட்டின் மேற்கூரையில் இருக்கும் சிமென்ட் தாள்களை உடைத்து, பின்னர் கூரை வழியாக அவரது வீட்டிற்குள் நுழைந்து கீதாவை வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைக் கண்ட கீதாவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து கீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இந்நிலையில் கீதா அவர்களின் மகன் வருண், தன் தாய் இறந்த செய்தி அறியாமல் காலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் போலீசார் வருணிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் வருணை காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அப்பா மகன் இருவரும் கூட்டாக செய்த செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
தன் தாயின் 2 கோடி சொத்திற்கு ஆசைப்பட்டு அப்பா மகன் இருவரும் கூட்டாக சேர்ந்து அடியாட்கள் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பண்டேபல்யா போலீசார் கீதா அவர்களின் அஞ்சனி (55) மற்றும் அவரது மகன் வருண் (26) மேலும் ஒப்பந்த கொலையாளிகள் நவீன் குமார் (34), நாகராஜு (22), பிரதீப் (22) மற்றும் நாகராஜா (21) ஆகிய ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
சொத்திற்காக சொந்த அம்மாவை கொலை செய்த மகனையும், மனைவியை கொலை செய்த கணவரையும் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
