'ஆசையாக தாத்தா காத்திருக்க'... 'தாய் மண்ணை வந்தடைவதற்குள்'... 'முதல் பயணமே இறுதியான சோகம்'... 'கலங்கச் செய்யும் சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான விபத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று தாய் மண்ணை வந்தடைவதற்குள் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த தம்பதி நிஜாஸ் - சாஹிரா. துபாயில் வசித்துவரும் இவர்களுக்கு அங்கேயே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்பதால் கடந்த ஒரு வருடமாக அவர்கள் சொந்த ஊருக்கு வரும் பயணத்தை தவிர்த்து வந்துள்ளனர். கொரோனா சூழலாலும், குழந்தையைப் பார்க்க வேண்டும் என கோழிக்கோட்டில் உள்ள குழந்தையின் தாத்தா கேட்டதாலும் குழந்தை ஆசாம் முகமதுவை அவர்கள் துபாயிலிருந்து இந்தியா அழைத்துவந்துள்ளனர்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் விமானம் தரையிறங்கும்போது நேர்ந்த கோர விபத்தில் தாய் மண்ணை வந்தடைவதற்குள் குழந்தை ஆசாமின் முதல் விமான பயணமே இறுதி பயணமாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் குழந்தையின் தாய் சாஹிராவும் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும்போது குழந்தை ஆசாம் மடியில் இருந்துள்ளது. நிஜாஸ் - சாஹிரா தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில், அவர்களும் இந்த விபத்தில் படுகாயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்ற செய்திகள்
