'கடத்தப்பட்ட கணவரை தேடியபோது'... 'அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த மகன்'... 'நடுங்கச் செய்யும் சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் சொந்த தந்தையையே ஒருவர் கடத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பன்னீர்செல்வம் (52) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை கோவிலுக்குச் சென்றபோது காணாமல் போயுள்ளார். பின்னர் அவர் மனைவி பதறிப்போய் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்க, போலீசாருக்கு காணாமல் போனவருடைய மூத்த மகன் ராஜேஷ் குமார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்த அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். போலீஸ் விசாரணையில், கோவிலுக்கு செல்லும் வழியில் நண்பர்கள் உதவியுடன் ராஜேஷ் அவருடைய தந்தையைக் கடத்தியதும், பின்னர் தந்தையைக் கொலை செய்ய அவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. ராஜேஷுடன் சேர்ந்துகொண்டு பன்னீர்செல்வத்தை கடத்திய கும்பல் அவரை விஷம் செலுத்தி கொலை செய்துவிட்டு, அவருடைய உடலை காட்டுப்பகுதியில் வீசியுள்ளனர்.
ராஜேஷ் தனது வாக்குமூலத்தில், தந்தையிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய பணம் கேட்டதாகவும், அவர் அதற்கு உதவி செய்ய மறுத்ததாலேயே அவரைக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் தந்தைக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும், அதன் காரணமாகவும் தான் அவரைக் கொலை செய்ததாக ராஜேஷ் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
