“ஆரம்பத்துல ரொட்டி விற்று கஷ்டப்பட்டார்!”.. ‘ஐஏஎஸ்’ தேர்ச்சி பெற்று, இறந்த அப்பாவின் கனவை நனவாக்கிய மகள்.. .. அதற்காக 2018ல் செய்த துணிச்சலான காரியம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 10, 2020 11:57 AM

விபத்தில் மரணமடைந்த தனது அப்பாவின் ஐ.ஏ.எஸ் கனவை ஸ்வீட்டி செஹ்ராவ்த் (28) நிறைவேற்றி அசத்தியுள்ளார்.

late policeman daughter succeed in IAS Exam fulfill fathers dream

ஸ்வீட்டி செஹ்ராவ்த்தின் தந்தையும் டெல்லி காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவருமான டேல் ராம் செஹ்ராவத் கடந்த 2013-ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

தனது மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற  டேல் ராம் செஹ்ராவத்தின் கனவை நிறைவேற்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு டிசைன் என்ஜினியரான இருந்த ஸ்வீட்டி தனது வடிவமைப்பு பொறியாளர் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார்.

பள்ளி கல்லூரிகளில் படித்த பாடங்கள் வெவ்வேறாக இருந்ததால், இந்தத் தேர்வு தனக்கு எளிதாக இருக்கவில்லை என்று கூறும் ஸ்வீட்டி, 2018-ஆம் ஆண்டு, தனது முதல் முயற்சிக்கு பின்னர், வேலையை உதறிவிட்டு, மனிதநேயம், புவியியல் மற்றும் உலக வரலாறு போன்ற பாடங்களை தானே படித்து இந்தத் தேர்வில் வெற்றி அடைந்ததாக தெரிவிக்கிறார்.

தேர்வு முடிவுகள் வெளிவந்த தினத்தின் பிற்பகலில்தான், இந்திய தரவரிசையில் தான் 187வது இடத்தில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அவரது தாயார் கமலேஷ் மற்றும் சகோதரர் ஹரிஷ் உற்சாகமடைந்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

“அப்பா தொடக்கக் காலத்தில் ரொட்டி விற்று 1989ல் போலீஸ் துறையில் சேர்ந்ததால், அவரது கஷ்டம் எனக்கு தெரியும் என்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக நாங்கள் ஆக வேண்டும் என்பதுதான் அவரது கனவு” என்று ஸ்வீட்டியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Late policeman daughter succeed in IAS Exam fulfill fathers dream | India News.