VIDEO: 'மிலிட்டரி'ல இருந்து வந்து 'ஹீரோ'ன்னு பாராட்டுனாங்க,,.. ஒரே நைட்டில் ஸ்டாரான '3' வயது 'சிறுவன்'!!!,,.. அப்படி என்ன மாஸ் பண்ணிட்டான் பையன்??

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 27, 2020 09:21 AM

பிரேசில் நாட்டிலுள்ள நகர் ஒன்றைச் சேர்ந்த ஆர்தர் டி ஒலிவேரா என்ற மூன்று வயது சிறுவன், தனது நண்பர் ஒருவருடன் நீச்சல் குளம் அருகில் அமர்ந்திருந்தான்.

brazil 3yr old saves friend from drowning cctv viral

அப்போது சிறுவன் ஆர்தரின் நண்பன் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்த காற்று நிரம்பிய பலூன் ஒன்றை பிடிக்க முயற்சி செய்துள்ளான். இதில், அந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்திற்குள் விழுந்து உயிருக்கு போராடியுள்ளான். எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்ததால் பதறிப் போன சிறுவன் ஆர்தர், தன்னைச் சுற்றிலும் உதவிக்கு யாராவது உள்ளார்களா என பார்த்துள்ளான்.

அருகில் காப்பாற்ற யாருமில்லை என்பதை உணர்ந்த ஆர்தர், தனது நண்பனை மிகவும் சாமர்த்தியமாக நீச்சல் குளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளான். இது தொடர்பான காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியிருந்ததை தொடர்ந்து, அந்த வீடியோவை சிறுவன் ஆர்தரின் தாயார், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, அந்த வீடியோ இணையதளங்களில் அதிகம் வைரலானது. நெட்டிசன்கள் பலர் சிறுவனின் முயற்சிக்கு லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், மூன்று வயது சிறுவனின் தைரியத்தை பாராட்டிய பிரேசில் ராணுவத்தினர், இனிப்புகள் மற்றும் கூடைப்பந்துடன் அவரது வீட்டுக்கு சென்று பாராட்டினர். மேலும், ஹீரோ என்றொரு சான்றிதழ் மற்றும் கோப்பை ஒன்றையும் அவருக்கு வழங்கினர். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brazil 3yr old saves friend from drowning cctv viral | World News.