"மகளைக் கொன்றதற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தந்தை!".. 18 மாதம் கழித்து மகன் கண்ட அதிர்ச்சி காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் மகளை கொன்றதாக சிறை தண்டனை அனுபவித்து வந்த தந்தைக்கு மகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மலப்புர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல். கடந்த பிப்ரவரி மாதம் 6- ஆம் தேதி தனது சகோதரி கமலேஷை காணவில்லை என்று அதம்புர் காவல் நிலையத்தில் இவர் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் கமலேஷின் தந்தை சுரேஷ், சகோதரர் ரூப் கிஷோர் மற்றும் தேவேந்திரா உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான ஆதாரமாக கமஷேஷின் உடைகள் ,கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமான துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், ‘கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் எனது தங்கை கமலேஷை அவர் காதலித்த ராகேஷுடன் நாங்கள் பார்த்தோம். அவர்களுக்கு குழந்தை கூட உள்ளது’ என்று ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் காவல் துறையினர் தன்னையும் தனது தந்தையையும், சகோதரரையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
