'விடுமுறைக்கு வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'... 'இரக்கமின்றி பெற்ற தந்தையே செய்த பயங்கரம்'... 'வெளியான பதறவைக்கும் சிசிடிவி பதிவு!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாசொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே கொடூரமாகக் கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெண்டூர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர ராஜு. கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ள நிலையில், மகன் ஜல ராஜும் கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார். மகனுக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தபோது தந்தை வீர ராஜுக்கும் மகன் ஜல ராஜுக்கும் இடையே அடிக்கடி சொத்துத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த வீர ராஜு சம்பவத்தன்று வீட்டின் முன் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த ஜல ராஜூவை இரக்கமின்றி பயங்கர ஆயுதத்தால் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிசிடி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
