‘தொடர்ந்து பாலியல் தொல்லை செய்த ஆணுக்கு’.. இளம்பெண் கொடுத்த ‘நூதன தண்டனை’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 26, 2019 11:46 AM

கன்னியாகுமரி அருகே பாலியல் தொல்லை செய்த நபருக்கு இளம்பெண் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளார்.

Angry Woman beats up man who tried to misbehave video goes viral

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்துள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டருகே பழக்கடை வைத்திருக்கும் திருமணமான நபர் ஒருவர் அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தொந்தரவு பொறுக்க முடியாமல் அந்தப் பெண் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் அவரும் நன்றாகப் பேசி வீட்டிற்கு பின்னால் இருக்கும் குடோனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்தப் பெண் அவரை அடித்து நொறுக்கத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத அந்த நபர் தப்பிச் செல்ல எவ்வளவு முயன்றும் விடாமல் அந்தப் பெண் அவரைத் திட்டியபடியே தொடர்ந்து அடித்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர தற்போது அது வைரலாகப் பரவி வருகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையிலும் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த நபரை அடித்து நொறுக்கிய அந்தப் பெண்ணின் தைரியத்திற்கு அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : #WOMAN #BEATSUP #MAN #KANYAKUMARI #VIRAL #VIDEO