டூர் முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்.. ரொம்ப நாளைக்கு அப்பறம் சூட்கேஸை திறந்தப்போ அவங்களே தெறிச்சு ஓடிட்டாங்க..வனத்துறைக்கு பறந்த போன்கால்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சுற்றுலா சென்று திரும்பிய இளம்பெண் ஒருவர் தனது சூட்கேசில் இருந்ததை பார்த்துவிட்டு திகைத்துப் போயிருக்கிறார். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் வந்து நிலைமையை சரி செய்திருக்கிறார்கள்.
Also Read | "நெட்டிசன்களை நெகிழ வச்ச தாய் மற்றும் மகன்".. ராணுவ அதிகாரி பகிர்ந்த Viral புகைப்படம்..!
சுற்றுலா
பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. விடுமுறை நாட்களில் தொலைதூர இடங்களுக்கு சென்றுவர அனைவருக்குமே விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சுற்றுலா செல்லவே செலவழிக்கின்றனர். ஆண்டுக்கணக்கில் கடினமாக உழைக்கும் இந்த மக்கள், கண்காணாத தேசத்துக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்துவிட்டு மீண்டும் தங்களுடைய வாழ்வை புத்துணர்ச்சியுடன் துவங்குகின்றனர். அப்படித்தான் குரோஷியா நாட்டுக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தனது சூட்கேஸை பிரித்துப் பார்த்தபோது திகைப்படைந்திருக்கிறார்.
சூட்கேஸ்
மத்திய ஐரோப்பாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது ஆஸ்திரியா என்னும் நாடு. இந்த நாட்டின் அட்டர்ன்பேக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குரோஷியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி சுற்றுலா முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அவர். இதனிடையே சமீபத்தில் தன்னுடைய டூர் பேக்கை திறந்து உள்ளார் அந்த பெண். அப்போதுதான் அவருக்கு உண்மையான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
அந்த இளம்பெண்ணின் சூட்கேசுக்குள் 18 தேள்கள் இருந்திருக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக வனத்துறை மீட்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த்திருக்கிறார்.
மீட்பு
இதனை தொடர்ந்து வன விலங்குகள் மீட்பு அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அந்த சூட்கேசில் தேள்கள் இருப்பதை உறுதிசெய்த அதிகாரிகள் அதனை பிடித்து பத்திரப்படுத்தி Linz விலங்குகள் பாதுகாப்பு மையத்துக்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய இந்த அமைப்பினை சேர்ந்த அதிகாரிகள்,"அட்டர்ன்பேக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எங்களை தொடர்புகொண்டார். அவருடைய சூட்கேசில் 18 தேள்கள் இருப்பதாகவும், உடனடியாக அதனை மீட்டு எடுத்துச் செல்லும்படியும் கூறினார்" என்றார்.
சுற்றுலா சென்ற இடத்தில் தனது சூட்கேஸுக்குள் தேள் சென்றதை அறியாமல் அந்த பெண் இருந்ததாகவும், இடைப்பட்ட நாட்களில் அந்த தேள் குட்டிகளை சூட்கேசுக்குள் ஈன்றுள்ளதாகவும் அவையனைத்தும் தற்போது பத்திரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நடந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read | அடி தூள்.. "சென்னையில் 2 வது ஏர்போர்ட் இங்க தான்".. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!