அடி தூள்.. "சென்னையில் 2 வது ஏர்போர்ட் இங்க தான்".. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read | "நெட்டிசன்களை நெகிழ வச்ச தாய் மற்றும் மகன்".. ராணுவ அதிகாரி பகிர்ந்த Viral புகைப்படம்..!
சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதாகவும், கூடுதலாக சென்னைக்கு அருகே மற்றொரு விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதனை தொடர்ந்து திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
ஆலோசனை
சென்னையில் இரண்டாவது விமானம் நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழக அரசு பல்வேறுகட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்திவந்தது. இதன் பலனாகவே திருப்போரூர், படாளம், பன்னூர், பரந்தூர் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த நான்கு இடங்களையும் ஆய்வு செய்யுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு விமான போக்குவரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வாகின. இதில் ஏதாவது ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கனிமொழி சோமு எம்பி எழுப்பிய கேள்வி
இந்நிலையில், மாநிலங்களவை எம்பியான கனிமொழி சோமு இன்று சென்னையில் அமையும் இரண்டாவது விமான நிலையம் குறித்து கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சென்னையை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், முதற்கட்டமாக பன்னூர் மற்றும் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என விமான போக்குவரத்துறை இணை அமைச்சர் தெரிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
