"EX பாய் ஃப்ரண்ட பழி வாங்கியே ஆகணும்..." ஆவேசமா கிளம்பிய பெண்.. "கடைசி'ல இப்டியா போய் கையும் களவுமா மாட்டுறது??.."
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய முன்னாள் காதலனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில், பெண் ஒருவர் செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு கரோலினா பகுதியில், ஒரு வீட்டின் உரிமையாளர், அதிகாலை வேளையில் திடீரென பக்கத்து வீட்டுக்காரர் சத்தம் கேட்டு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது வீட்டின் மீது பெண் ஒருவர், தீ பற்ற வைப்பதை பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்.
மேலும் அந்த வீட்டுக்கு முன்னால் ஏராளமான விறகு கட்டைகள் தீயில் எரிந்து கொண்டிருக்க, உரிமையாளர் உறைந்து போனார். தொடர்ந்து தண்ணீர் கொண்டு அதனை அணைக்க அவரும் முயற்சி செய்த நிலையில், அந்த வீட்டிற்கு தீ வைத்த பெண்ணோ, சீல் போட்டு பைப்பின் நீர்வரத்தை நிறுத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் அங்கு வருவதற்கு முன்பாகவே அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போலீசார், அதன் பின்னர் கிறிஸ் லூய்ஸ் ஜோனஸ் என்ற அந்த பெண்ணை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் மீது வீட்டிற்கு தீ வைத்தல் உள்ளிட்ட சில குற்றங்களை சுமத்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்தப் பெண் வீட்டிற்கு தீ வைத்ததன் காரணமாக சுமார் 20,000 டாலர் வரை சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இப்படி அவர் செய்ததற்கான காரணம் தான், பலரையும் அதிர்ந்து போக செய்துள்ளது. கிறிஸ்டிக்கும், அவர் தீ வைத்த வீட்டின் உரிமையாளருக்கும் எந்தவித பழக்கமும் இல்லை என கூறப்படுகிறது.
ஆனால், கிறிஸ்டி லூயிஸ் தீ வைத்த வீட்டிற்கு அருகே அவரது முன்னாள் காதலன் வீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது முன்னாள் காதலனை பழி வாங்குவதற்காக, அவரது வீட்டில் தீ வைப்பதற்கு பதிலாக மாற்றி, அவர் தீ வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
முன்னாள் காதலனை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில், பெண் செய்த காரியம், அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
