ஒரு வாரமா மாலுக்கு வெளிய நின்னுட்டு இருந்த கார்.. "பக்கத்துல போய் கண்ணாடி வழியா பாத்ததுல.." அரண்டு போன காவலாளி
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் காணாமல் போன நிலையில், அவரை பற்றி தற்போது தெரிய வந்த தகவல், பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகல.." வீடு புகுந்த பெண்ணின் தந்தை.. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்
Texas பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா லீ போவல் என்ற பெண்மணி, கடந்த ஜூலை 5ஆம் தேதி, அலுவலகத்திற்கு மிகவும் தாமதமாகி விட்டது எனக்கூறி, வீட்டில் இருந்து வேகமாக கிளம்பிச் சென்றுள்ளார்.
ஆனால், அதன் பின்னர் கிறிஸ்டினா வீடு திரும்பவே இல்லை. இதனால் அவரது தாய் மற்றும் குடும்பத்தினர், அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து, போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அவர்கள் அளித்துள்ளனர்.
இது பற்றி கிறிஸ்டினாவின் தாயான கிளவுடியா, சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவின் படி, தனது மகள் கிறிஸ்டினா, வேலைக்கு செல்வதாக வேக வேகமாக, கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றதாகவும், தனது செல்போன், ஆப்பிள் வாட்ச் மற்றும் மருந்து உள்ளிட்டவற்றை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல, அவரது கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றில் எந்த விதமான Transactions நடைபெறவில்லை என்றும், அவரைப் பற்றி ஏதேனும் விவரம் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள் எனக் கூறி, கிறிஸ்டினாவின் கார் எண் மற்றும் புகைப்படங்களை கிளவுடியா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல, Doorbell கேமராவின் வழி, கடைசியாக கிறிஸ்டினா வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், கிறிஸ்டினா காணாமல் போய் மூன்று வாரங்களுக்கு பிறகு அவரைக் குறித்து தெரிய வந்துள்ள தகவல், கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டினாவின் வீட்டிற்கு அருகே சில கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்துள்ள மால் ஒன்றின் கார் பார்க்கிங்கில், சுமார் ஒரு வாரமாக கார் ஒன்று நின்றுள்ளது. அது மட்டுமில்லாமல், அந்த காருக்குள் இருந்து ஒரு வித துர்நாற்றமும் வெளி வந்துள்ளதை காவலாளி கவனித்துள்ளார். ஒரே இடத்தில் ஒரு வாரமாக கார் ஒன்று நின்று வந்த நிலையில், அதற்குள்ளே பார்த்த காவலாளிக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
காரின் முன் பக்க பயணி பயணி இருக்கையில், பெண்ணின் உடல் ஒன்று இருந்த நிலையில், போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அது கிறிஸ்டினாவின் கார் என்பதும் உள்ளே இருந்தது கிறிஸ்டினா என்பதும் தெரிய வந்தது. அவரது பர்ஸ், காரில் இருந்ததால் அதிலிருந்து ஐடி மூலம் கிறிஸ்டினா தான் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
மேலும், அவரின் உடலில் எந்தவிதமான காயங்கள் இல்லை என்றும், எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் உறுதியாக தெரிந்து கொள்ள முடியும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும், காரின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
சுமார் மூன்று வாரத்திற்கு முன்பு காணாமல் போன பெண், ஒரு வாரமாக ஒரே இடத்தில் நின்று கொண்ட காருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | Video : விமானத்தில் வழங்கப்பட்ட 'உணவு'.. "காய்கறிக்கு நடுவுல இருந்தத பாத்துட்டு.." நடுங்கி போன விமான ஊழியர்

மற்ற செய்திகள்
