"நெட்டிசன்களை நெகிழ வச்ச தாய் மற்றும் மகன்".. ராணுவ அதிகாரி பகிர்ந்த VIRAL புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது தாய் படித்த அதே ராணுவ அகாடமியில் படித்து மகனும் ராணுவ வீரர் ஆகியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராணுவத்தில் பணிபுரிவது எளிதான காரியம் இல்லை. எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்டு பணியாற்றும் ராணுவ வீரர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் இந்த வீரர்கள், பொதுமக்களுக்கு ஓர் இடையூறு என்றால் உடனடியாக ஓடோடிச்சென்று உதவவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதேபோல, ஒவ்வொரு ராணுவ வீரரும் தங்களுடைய பிள்ளைகளை ராணுவத்துக்கு அனுப்பவே அதிகம் விரும்புகின்றனர். நாட்டின் சேவைக்கு எப்போதும் தங்களுடைய குடும்பத்தினரில் ஒருவர் இருக்கவேண்டும் என்ற எண்ணம் பல ராணுவ வீரர்களிடத்தில் இருக்கிறது. அந்த வகையில், தான் படித்த ராணுவ அகாடமியில் தனது மகனும் படித்து தேர்வாகிய சந்தோஷத்தில் திளைக்கும் முன்னாள் ராணுவ பணியாளர் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அம்மாவை போலவே மகன்
ஓய்வுபெற்ற மேஜர் ஸ்மிதா சதுர்வேதி 27 வருடங்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள ராணுவ அகாடமியில் பயின்று தேர்ச்சி பெற்றார். தற்போது அவருடைய மகன் அதே ராணுவ அகாடமியில் தேர்ச்சி பெற்று அதிகாரியாகி உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை பிரிவு மக்கள் தொடர்பு அதிகாரி மேஜர் ஸ்மிதா சதுர்வேதி தேர்வான போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது தனது மகனுடன் அவர் பெருமிதத்துடன் நிற்கும் புகைப்படத்தையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,"ஒரு பெண் அதிகாரிக்கு ஒரு அரிய மகிழ்ச்சியான தருணம். மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஓய்வு) 1995 ஆம் ஆண்டு 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் தேர்ச்சி பெற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இன்று அதே அகாடமியில் தனது மகன் அதே முறையில் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுவதை கண்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்நாள் மகிழ்ச்சி
இதுபற்றி மகிழ்ச்சியுடன் பேசிய மேஜர் ஸ்மிதா சதுர்வேதி,"இது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள். இன்று தேர்ச்சி பெற்ற பிற வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் பயிலும்போது இருந்ததை விட இங்கே நிறைய கட்டிடங்கள் எழுப்பப்பட்டுவிட்டன. உட்கட்டமைப்பு பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது" என்றார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Maj Smita Chaturvedi(Retd) reminisces her old days of being a Cadet in the illustrious Academy and ecstatic about her son re-enacting the glorious script of joining Army like herself. @adgpi @artrac_ia @smritiirani @MinistryWCD @DefenceMinIndia @IaSouthern @PIB_India @DDNewslive pic.twitter.com/yoi7AoyVMq
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) July 30, 2022