Battery
The Legend
Maha others

"இதான் என்னோட திறமை".. CHEWING GUM சாப்ட்டு சம்பாதிக்கும் இளம்பெண்.. மாச சம்பளத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 26, 2022 06:54 PM

chewing gum சாப்பிட்டு பபுள் விடுவதன் மூலமாக மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார் இளம்பெண் ஒருவர். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

Woman earns over Rs 67000 a month by chewing gum

Also Read | உலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க் சோகத்துடன் போட்ட ட்வீட்.. உடனே மஸ்க்கின் அம்மா போட்ட கமெண்ட்.. முழு விபரம்..!

இணையவசதி பெருகிவிட்டதன் பலனாக செல்போன்களின் பயன்படும் மக்களிடையே கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. இதுவே சமூக வலை தளங்களின் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் மக்கள் உலக நடப்புகளை, நம்மை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான தகவல்களை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே களமாக கொண்டு பலரும் தங்களது திறமைகளை இணையம் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் பலனாக திறமைசாலிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு தக்க வருவாயும் கிடைத்துவருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் chewing gum சாப்பிட்டு, பபுள் விடுவதன் மூலமாக சம்பாதித்து வருகிறார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Woman earns over Rs 67000 a month by chewing gum

பபுள்

ஜெர்மனியை சேர்ந்தவர் ஜூலியா ஃபோராட். 30 வயதாகும் இவர் ஒரே நேரத்தில் 30 சூயிங் கம்களை வாயில் போட்டு மென்று பபுள் விடுகிறார். இதற்காக ஒரு மாதத்திற்கு தோராயமாக 5 யூரோக்களை செலவிடுகிறார். ஆனால், இதன்மூலம் அவருக்கு ஒரு மாதத்திற்கு 700 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 67,000 ரூபாய்) கிடைக்கிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக இதனை ஆரம்பித்ததாகவும் தற்போது நல்ல பகுதி நேர வேலையாக இது இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜூலியா.

இதுகுறித்து அவர் பேசுகையில்,"உங்கள் சூயிங்கம் கிளிப்களை விற்கலாம் என்று என் நண்பர் ஒரு நாள் நகைச்சுவையாக என்னிடம் கூறினார். இது கொஞ்சம் வேடிக்கையாகத் தோன்றியது. ஆனால் நான் சில தேடல்களை மேற்கொண்டேன். அதற்காகவே இயங்கிவரும் ஆன்லைன் குழுக்களை கண்டறிந்த பிறகு அது உண்மையானது என்பதை உணர்ந்தேன்" என்கிறார்.

Woman earns over Rs 67000 a month by chewing gum

பார்ட் டைம்

மார்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்துவரும் ஜூலியா கொஞ்ச நாளிலேயே இந்த சூயிங்கம் தொழிலை பார்ட்-டைம் வேலையாக செய்யத் துவங்கினார். விரைவிலேயே ஜூலியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்கள் தங்களது விருப்பப்படி பபுளை ஊதுமாறு ஜூலியாவிடம் கோரிக்கை வைக்கின்றனர். இதனை ஜூலியா நிறைவேற்றியும் வருகிறாராம்.

Woman earns over Rs 67000 a month by chewing gum

இதன்மூலம் கிடைக்கும் பணம் பற்றி பேசிய அவர்,"இது எனக்கு முழு நேர வேலை இல்லை. நான் கட்டிடக்கலை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். இதிலிருந்து நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பது ஒவ்வொரு மாதமும் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் அது ஒரு மாதத்திற்கு 700 யூரோக்களுக்கு மேல் இருக்கும்" என்றார்.

Also Read | கையில் இருந்து ஒரே நேரத்துல பறந்த கோடிக்கணக்கான வௌவால்கள்.. பாத்தாலே மெர்சல் ஆகுதே.. வைரலாகும் வீடியோ..!

Tags : #WOMAN #EARNS #CHEWING GUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman earns over Rs 67000 a month by chewing gum | World News.