'DIVORCE' ஆனதற்கு பெண் வைத்த 'PARTY'.. அடுத்த நாள் காலையில் வந்த மெசேஜ்.. "அதோட அவங்க வாழ்க்கையே மாறி போச்சு.."
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருவரின் வாழ்வில், எந்த நொடி எந்த நபர் மீது காதல் அல்லது அன்பு வரும் என்றே கணிக்க முடியாது.

Also Read | பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!
ஆரம்பத்தில், நண்பர்களாக ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல அவர்களுக்கு இடையேயான உறவு, அடுத்த கட்டங்களுக்கு மிகவும் உன்னதமாக கடந்து செல்லும்.
அந்த வகையில், பெண் ஒருவருக்கு எதிர்பாராத வகையில், கிடைத்த காதல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த 2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், Gabriella Landolfi என்ற பெண் ஒருவர், தனக்கு விவாகரத்து கிடைத்ததன் பெயரில், திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததால், அதற்காக பார்ட்டி ஒன்றை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். பலரும் தங்களின் இணையிடம் இருந்து பிரியும் போது, மிக வேதனையாக வாழ்க்கையை கடக்கும் நிலையில், Gabriella அதனைக் கொண்டாட விரும்பியது அந்த சமயத்திலேயே அதிகம் பேசப்பட்டிருந்தது.
தொடர்ந்து, தனது விருந்தினர்களுக்கு உணவுகளை பரிமாற Topless Waiters சிலரை Gabriella நியமனம் செய்திருந்தார். தொடர்ந்து, பார்ட்டி அனைத்தும் சிறப்பாக சென்ற நிலையில், மறுநாள் காலையில் வெயிட்டர்களில் ஜான் என்ற ஒருவர், கேப்ரியல்லாவுக்கு மெசேஜ் ஒன்றையும் அனுப்பி உள்ளார். தொடர்ந்து, ஜான் மற்றும் கேபிரியல்லா ஆகியோர், அடிக்கடி பேசியும், வெளியே சந்தித்தும் வந்துள்ளனர்.
இதன் இறுதியில், ஒருவருக்கு ஒருவர் விரும்பவும் ஆரம்பித்துள்ள நிலையில், ஒன்றாக இணைந்து வாழவும் தொடங்கினர். இதுகுறித்து பேசும் கேபிரியல்லா, "எனது விவாகரத்து பார்ட்டிக்காக நான் நியமித்த வெயிட்டரில் ஒருவர் மீது காதல் வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு சூறாவளி போல எனது வாழ்வில் வந்த ஜான் மீது, எனக்கு விருப்பமும் தோன்றியது. விவாகரத்து ஆனதால் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டதை ஏன் கொண்டாடக் கூடாது என யோசித்து தான் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன்" என தெரிவித்தார்.
அதே போல, கேபிரியல்லா உடனான உறவு குறித்து பேசும் ஜான், முதலில் ஒரு நண்பராக தான் மாற வேண்டும் என நான் நினைத்தேன் என்றும், அதன் மூலம் எனது மனைவியை நான் கண்டுபிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
PCOS மூலம் பாதிக்கப்பட்டு வந்த கேப்ரியில்லா, கடந்த 2020 ஆம் ஆண்டு, கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், அதே ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் திருமணம் நடைபெற இருந்த இரண்டு வாரங்களுக்கு முன் கருச்சிதைவும் கேபிரியல்லாவுக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மீண்டும் கருவுற்ற கேப்ரியல்லா, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் மாறி உள்ளார்.

மற்ற செய்திகள்
