"பொண்ணுங்களுக்கும் மீசை அழகு தான்.." ஆரம்பத்தில் அவமானம்.. "இப்போ அது தான் ப்ளஸ் பாய்ண்ட்'டு.." யாருங்க இந்த பொண்ணு?
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, ஒரு ஆணாக இருந்தாலே, பலருக்கும் மீசை மற்றும் தாடியை வைத்துக் கொண்டு கம்பீரமாகவோ அல்லது ஸ்டைல் ஆகவோ இருக்க வேண்டும் என தோன்றும்.
அப்படி ஒரு வேளை, மீசை மற்றும் தாடி இல்லாமல் இருந்தால் கூட, அதை வைத்துக் கொண்டே தங்களின் அழகை வெளிக் காட்ட வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
அதே வேளையில், பெண் ஒருவர் மீசை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என கூறினால், பலரும் ஒரு நிமிடம் குழப்பத்தில் தான் உறைவார்கள்.
முகத்தில் வளர்ந்த 'முடி'
ஆனால், பெண்ணுக்கும் மீசை அழகு தான் என்பதை நிரூபித்துள்ளார், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண். கேரள மாநிலம், கண்ணூரை அடுத்த சோலையாடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் ஷைலஜா. 34 வயதாகும் இவருக்கு சிறு வயதாக இருக்கும் போதே முகத்தில் எங்கும் அதிக முடிகள் வளர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில், பெண்ணின் முகத்தில் அதிக முடி இருக்கிறதே என பலரும் கிண்டல் செய்தும், அவமானப்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது.
ப்ளஸ் பாய்ண்ட் ஆக மாற்றிய பெண்
இதனால், ஆரம்பத்தில் அதிக மன வேதனையுடன் ஷைலஜா இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, எதன் பெயரில் தன்னை பலரும் கிண்டலுக்குள் ஆளாக்கினார்களோ, அதனையே தனது மிக பெரிய ப்ளஸ் பாய்ண்ட் ஆகவும் மாற்ற வேண்டும் என ஷைலஜா முடிவு செய்துள்ளார். இதனால், தன்னைச் சுற்றி உருவான விமர்சனங்களை புறம் தள்ளி விட்டு, மீசையை வளர்க்கத் தொடங்கினார் ஷைலஜா.
இதனைத் தொடர்ந்து, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரையும் ஷைலஜா திருமணம் செய்துள்ளார். ஷைலஜா மீசை வளர்ப்பது தனக்கு சந்தோசம் தான் என்றும், தடையாக இருக்க மாட்டேன் என்றும் முழுதாக ஆதரவு அளித்துள்ளார் கணவர் லட்சுமணன். அது மட்டுமில்லாமல், சிறு வயதில் அதிகம் கேலிக்குள் ஆன தனது மீசையை பலரும் தற்போது புகழ்ந்து வருவதாகவும் ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் பகுதியில் பனியன் கம்பெனியின் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஷைலஜாவை, பலரும் 'மீசை' ஷைலஜா என்று தான் அழைத்து வருகிறார்கள்.