"கல்யாணமாகி 6 மாசம் தான் ஆச்சு.." இரவு நேரம், அறைக்குள் கேட்ட பயங்கர சத்தம்.. சென்னையை அதிர வைத்த 'சம்பவம்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 01, 2022 02:36 PM

சென்னையில், திடீரென நள்ளிரவில் அறையில் இருந்து வெடி சத்தம் கேட்ட நிலையில், வாலிபருக்கு நேர்ந்த சம்பவம், பலரையும் அதிர்ந்து போக செய்துள்ளது.

chennai newly wed man died after ac blast in room

Also Read | "கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க.." கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகை & அமைச்சர் ரோஜா.. "இப்டி கூட சாதனை பண்ணலாமா??"

சென்னையின் பெரம்பூர், திருவிக நகர் பகுதியை அடுத்த மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷியாம். இவர் அப்பகுதியில் பாக்கெட் பால் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஷியாமுக்கும், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணமும் நடைபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது ஆடி மாசம் என்பதால், கணவன் மனைவியான ஷியாம் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிரிந்து இருக்க வேண்டும் என அவர்களின் பெற்றோர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், தனலட்சுமி தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்ததால், தனது பெற்றோர்களுடன் ஷியாம் மணவாளன் தெருவில் வசித்து வந்துள்ளார்.

chennai newly wed man died after ac blast in room

இந்நிலையில், தனது வீட்டின் கீழ் தளத்தில் இருந்த ஷியாம், படுக்கை அறையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென அவரது அறையில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கேட்டதால், மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஷியாமின் தந்தை, பதறிப் போய் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக தோன்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, ஷியாம் தூங்கிக் கொண்டிருந்த அறை, உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக, ஷியாமின் தந்தை மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஷியாம் அறையில் இருந்த ஏசி, வெடித்து தீப்பிடித்து, அதில் சிக்கி ஷியாமும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

chennai newly wed man died after ac blast in room

இதனை அறிந்து அவரது குடும்பத்தினர் கதறித் துடித்த நிலையில், போலீசார் ஷியாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனையையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் மின் அழுத்தம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

திருமணமான ஆறே மாதத்தில், வாலிபர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | பேஸ்புக் மூலம்.. தாயின் மறைவு பற்றி தெரிந்து கொண்ட மகன்.. மனம் நொறுங்க வைத்த 'பின்னணி'!!

Tags : #CHENNAI #NEWLY MARRIED #AC #AC BLAST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai newly wed man died after ac blast in room | Tamil Nadu News.