இந்தியாவுலயே பணக்கார பெண் இவங்கதானாம்.. சொத்து மதிப்பை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. உலகத்தை திரும்பி பார்க்க வச்ச தமிழ்ப்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரிய பணக்கார பெண்மணி என்னும் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்க வைத்திருக்கிறார் ரோஷினி நாடார்.
ரோஷினி நாடார்
HCL நிறுவனத்தினை துவங்கியவரான தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரின் ஒரே மகளான ரோஷினி நாடார் டெல்லியில் உள்ள வசந்த் வேலி (Vasant Valley) பள்ளியில் படித்தவர். அதன்பிறகு நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (Northwestern University) தகவல் தொடர்பு துறையில் பட்டம் பெற்ற இவர் மேலாண்மை படிப்பையும் முடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த ரோஷினி, பின்னர் HCL நிறுவனத்தில் இணைந்தார். தற்போது HCL நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் HCL ஹெல்த்கேர் நிறுவனத்தின் துணை தலைவரான சிக்கந்தர் மல்ஹோத்ரா என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
முதலிடம்
இந்நிலையில், ஹாரூன் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பணக்கார பெண்மணிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் ரோஷினி நாடார் முதலிடத்தில் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டுக்கான பட்டியலிலும் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய சொத்து மதிப்பு ரூ.84,330 கோடியாகும்.
ஹாரூன் வெளியிட்ட இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நைக்கா நிறுவனத்தின் ஃபால்குனி நாயர். இவரது சொத்து மதிப்பு ரூ.57,520 கோடி. இதேபோல, ரூ.29,030 கோடி சொத்து மதிப்புடன் கிரண் மசூம்தார் ஷா பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
புதுமுகங்கள்
இந்தியாவின் 100 பணக்கார பெண்மணிகளின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2,725 கோடிகளாக இருந்திருக்கிறது. இந்நிலையில் இந்த இந்த ஆண்டு இந்த மதிப்பு 4,170 கோடிகளாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் 25 புதுமுகங்கள் இணைந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.