லாட்டரியில்.. 1 லட்சம் டாலர் பரிசு.. "ஆனா, அதுக்கு முன்னாடி.." இன்ப அதிர்ச்சியில் உறைந்த பெண்
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் பல நாடுகளில், லாட்டரி விநியோகம் என்பது அதிகாரபூர்வமான ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும், இதன் மூலம் ஏராளமானோருக்கு எதிர்பார்க்காத வகையில் அதிர்ஷ்டம் அடித்து, அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடும்.
சமீபத்தில் கூட, இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் மேல், பரிசாக விழுந்திருந்தது.
அதற்கு முன்பாக, துபாய் லாட்டரியில், திருமணமான மறுநாளே ஒரு நபருக்கு பல கோடி ரூபாய் பரிசாக விழுந்ததும் அதிர்ஷ்டமான தருணமாக.பார்க்கப்பட்டது. அந்த வகையில், தற்போது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபூர்வமாக அடித்துள்ள அதிர்ஷ்டம் ஒன்று, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் Gold Coast நகரத்தை அடுத்த Nerang என்னும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், சூப்பர் ஜாக்பாட் டிராவில், 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய்), அவரது லாட்டரி சீட்டுக்கு பரிசாக விழுந்துள்ளது. இதனால், கிட்டத்தட்ட இரட்டிப்பு மகிழ்ச்சியில் அந்த பெண் உறைந்து போயுள்ளார்.
இதற்கு காரணம், இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, லாட்டரி மூலம் இதே போன்று 1 லட்சம் டாலர்களை பரிசாக வென்றிருந்தார். தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே நிறுவனத்தின் லாட்டரி குலுக்கலில், 1 லட்சம் டாலர்களை அவர் பரிசாக வென்றுள்ளது, பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இரண்டாவது முறையாக, தனக்கு பரிசுத் தொகை கிடைத்ததை கொஞ்சம் கூட அந்த பெண் நம்ப முடியாமல், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். தொடர்ந்து, தான் வெற்றி பெற்றது உறுதியானதும் வியப்பில் அவர் சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
"நான் எதேச்சையாக தான் இந்த முறை லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினேன். பெரிய வெற்றியை எதிர்பார்க்காமல் ஒரு ஆர்வத்தில் தான் நான் லாட்டரியை வாங்கினேன். அப்படி இருக்கையில், மீண்டும் மிகப் பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது, என்னை அதிர்ச்சி அடையவும் செய்துள்ளது. கடைசியாக நான் வெற்றி பெற்ற பணத்தைக் சேமிப்பாக சேர்த்தேன். அது மிகவும் நிம்மதியாக இருந்தது. இந்த முறை நான் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி அதனை கொண்டாடலாம் என விரும்புகிறேன்" என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
பலருக்கும் ஒரு முறை லாட்டரி விழுவது கனவாக இருக்கும் நிலையில், இரண்டு மாதத்தில் இரண்டு முறை பெண் ஒருவருக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம், பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
