"வரும்போது சில்றை கொண்டு வாங்க..".. "ஓகே மேடம்".. ஆர்டர் பண்ண CAKE-அ பார்த்து அதிர்ந்த இளம்பெண் 😀
முகப்பு > செய்திகள் > இந்தியாபெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்திருந்த நிலையில், அது வந்து சேர்ந்த விதம் தான், நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் உணவு பொருட்களை ஆர்டர் செய்வது என்பது மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்றாகும்.
அதிகமாக வேலை விஷயமாக நாம் இயங்கி வரும் போது, நேரடியாக உணவகங்கள் சென்று உணவு அருந்துவதை விட, ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம், நேரத்தை மிச்சப்படுத்தி கொள்ளலாம் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.
இதனால், ஆன்லைனில் உணவு வகைகளை ஆர்டர் செய்வதையே பலரும் விரும்புகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், நாம் ஆர்டர் செய்த பொருள் மாறி வருவது உள்ளிட்ட ஏராளமான குழப்பங்களும் அவ்வப்போது நிகழாமல் இல்லை. ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான், பெண் ஒருவருக்கு நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், வைஷ்ணவி என்ற பெண் ஒருவர் இது தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள பதிவின் படி, கேக் ஷாப் ஒன்றில் இருந்து கேக் ஒன்றை அவர் ஆர்டர் செய்துள்ளார். மேலும், தான் ஆர்டர் செய்த செயலியின் டெலிவரி குறிப்பில், வரும் போது 500 ரூபாய்க்கு கொண்டு வர வேண்டும் என ஆங்கிலத்தில் 'bring 500 change' என அந்த பெண் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில்லறை கொண்டு வர வேண்டும் என்ற பெண்ணின் குறிப்பை பேக்கரி ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பெண் ஆர்டர் செய்த கேக்கின் மீது, "bring 500 change" என்ற வாக்கியம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பு அலையை உண்டு பண்ணி உள்ளது. மேலும், வைஷ்ணவி என்ற அந்த பெண், தனது கேப்ஷனில், "500 ரூபாய்க்கு சில்லறை கொண்டு வாருங்கள் என நான் டெலிவரி குறிப்பில் எழுதினேன். அவர்கள் அதனை கேக்கில் எழுதி அனுப்பி விட்டார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
டெலிவரி ஊழியர் வரும் போது, அந்த பெண் சில்லறை பற்றி கேட்டாரா என்பது பற்றிய விவரம் சரிவர தெரியவில்லை. ஆனால், அதே வேளையில் ஏதோ ஒரு தேவைக்கு அந்த பெண் வாங்கிய கேக், இப்படி ஒரு நிலையில் வந்து இருப்பதால், அதனை வெட்டும் போது பெண் அல்லது அவரின் உறவினர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என வேடிக்கையாக தெரிவித்து வருகின்றனர்.
இது போன்ற குழப்பங்கள் ஏற்படாமல் இருக்க, நேரடியாக கடைக்கு சென்று வாங்கி வருவது தான் சிறந்த வழி என்றும், சிலர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
