பையன் இல்லாம தனியா கல்யாணம் பண்ணி வைரலான பெண்.. "அடுத்த கட்ட பிளானுக்கும் இப்போ அவங்க ரெடி.."
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம்பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் இந்த விஷயம் வைரலாக பேசப்பட்டிருந்தது.

குஜராத்தின் வதோதரா பகுதியில் வசித்து வரும் ஷாமா பிந்து என்ற பெண், ஜூன் 11ஆம் தேதி, தனியாக திருமணம் செய்திருந்தார். இதற்கு சோலோகேமி என்று பெயர்.
இது குறித்து பேசி இருந்த ஷாமா பிந்து, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனால் மணமகளாக விரும்பியதால் நானே என்னை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன் என்றும் கூறியிருந்தார். அதே போல, நான் என்னை நேசிக்கிறேன் என்றும், இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவில், முதல் முறையாக சுயதிருமணம் செய்து கொண்டதும் ஷாமா பிந்து தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தன்னைத் தானே ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொண்ட விஷயம் பற்றி பலரும் ஏராளமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். தனக்கு தானே இவர் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஷாமா பிந்து தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருக்குறது. திருமணத்திற்கு பின்னர், தேனிலவுக்காக கோவா செல்வதாகவும் ஷாமா பிந்து முன்பு குறிப்பிட்டிருந்தார். திருமணம் ஆகி சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், அதன் அடுத்த கட்டமாக தன்னுடைய ஹனிமூனுக்காக, வரும் ஆகஸ்ட் 7 அம் தேதி கோவா செல்லவும் ஷாமா பிந்து முடிவெடுத்துள்ளார்.
கோவாவில் உள்ள Arambol என்னும் கடற்கரை தன்னுடைய ஃபேவரைட் இடம் என்றும் அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தான் ஹனிமூனில் இருக்கும் போது, பலரும் என்னிடம் உங்கள் கணவர் எங்கே என்று கேட்பார்கள். அப்படி கேட்கும் போது அவர்களிடம் சோலோகேமி குறித்து விளக்கி, என்னையே நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும், அதற்கான காரணத்தையும் அவர்களிடம் தெரிவிக்க ஒரு வாய்ப்பு உருவாகும் எனவும் ஷாமா பிந்து குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பின்பான தனது வாழ்க்கை பற்றி பேசிய ஷாமா, மற்ற புதிதாக திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கையை போல, தானும் சிறப்பாக அதனை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Also Read | "அந்த 7 மணி நேரத்த வாழ்க்கை'ல மறக்க மாட்டேன்.. " பயங்கரமான இரவு.. பீதியில் உறைந்த இளைஞர்!!..

மற்ற செய்திகள்
