'அப்படி என்ன கேள்வி கேட்டுட்டாரு'... 'இந்த ஒரு கேள்விக்காக கழுத்தை நெறிக்க இருக்கும் மரண தண்டனை'... தடகள வீரருக்கு நேர்ந்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நேரத்தில் அரசை நோக்கி கேள்வி எழுப்பிய மாற்றுத்திறனாளி வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலகையே ஆட்டம் காண வைத்த கொரோனா எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 2011 நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஈரான் பாடிபில்டர் ரேஸா தப்ரிஸி.
இவர் இன்ஸ்டாகிராமில், புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜிம்களை மூடுவது வேடிக்கையானது என்று கூறி இருந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாகக் கூறி ஈரான் போலீசார் ரேஸா தப்ரிஸியை கைது செய்தனர். இதையடுத்து தனது கருத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு ரேஸா தப்ரிஸி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.
இருப்பினும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ரேஸா தப்ரிஸிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காலத்தில் ஜிம்களை மூடிவிட்டு வழிபாட்டுத் தலங்களை மட்டும் திறப்பது நியாயமா என்று கேட்டதற்காக ரேஸா தப்ரிஸி மரணதண்டனையை எதிர்நோக்கி இருப்பது வேதனையின் உச்சம்.