கொரோனாவ விட இதுதான் ரொம்ப 'கொடுமையா' இருக்கு... '700 பேர் உயிரிழப்பு'... 100 பேருக்கு 'பார்வை' பறிபோனது!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 29, 2020 07:17 PM

கொரோனா வைரஸ் காரணமாக ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொடிய வைரஸ் மூலம் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

A country gets affected more than Corona by 700 deaths

கொரோனா வைரஸ் மூலம் ஈரான் நாட்டில் இதுவரை சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ள பொருளாதார தடைகளால் அதிர்ந்து போயுள்ள ஈரான் அரசு, மறுபக்கம் கொரோனாவின் பிடியில் திணறி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த போது, சாராயம் குடித்தால் வைரஸில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என்ற வதந்தி பரவிய நிலையில் அதனை நம்பி பலர் சாராயம் குடிக்க ஆரம்பித்தனர். மேலும் சிலர் 'மெத்தனால்' என்ற வேதிப்பொருள் கலந்த சாராயத்தை குடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் ஈரானில் தீவிரமடைந்த போது விஷ சாராயம் குடித்து முப்பது பேர் உயிரிழந்தனர்.  வதந்தியை உண்மை என்று நம்பி விஷ சாராயம் குடித்து இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் விஷ சாராயம் குடித்து சுமார் நூறு பேருக்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளதாகவும், 5,500 பேர் வரை சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.