'உண்மையான' பாதிப்பு '7 லட்சத்திற்கும்' மேல்... உலகிலேயே 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடாக 'மாற' வாய்ப்பு... 'அதிர்ச்சி' கொடுக்கும் அறிக்கை...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 16, 2020 06:33 PM

ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அரசு கூறியதை விட  8 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்குமென நாடாளுமன்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Iran Corona Infection Rate May Be Higher Than Official Count

ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 76,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,777 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அறிக்கையில், "கொரோனா பாதிப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கையை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பலி எண்ணிக்கை 80 சதவீதம் அதிகமாக இருக்கும். அதாவது ஈரானில் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம். 8,500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மட்டுமே இதுவரை கணக்கிடப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலேயே பாதிப்புடன் இருக்கலாம் அல்லது  உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளவர்களையும் சேர்த்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு கொடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை சரியாக இருந்தால் உலக நாடுகளிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் மாறும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.