'அவங்க நிஜ முகத்தை மக்கள் பார்க்க தொடங்கிட்டாங்க...' 'இப்படி நசுக்குறது அவங்களுக்கு புதுசு இல்ல...' ஈரான் அதிபர் குற்றசாட்டு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் உண்மையான முகத்தை இப்பொழுது தான் அந்நாட்டு மக்கள் உணர துவங்கியுள்ளதாகவும், I CAN'T BREATHE என்ற முழக்கம் அமெரிக்காவால் நசுக்கப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தும் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே நடக்கும் பனிப்போர் உலகறிந்ததே. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்படும் என மற்ற நாடுகள் எண்ணிவந்த நிலையில் இதுவரை போர் நடக்கவில்லை என்பது ஆறுதலானது. இதற்கு காரணம் ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியுமான ஜெனரல் காசெம் சுலைமானியை மனிதர்களே இல்லாமல் ட்ரோனை வைத்து ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் கொன்றது.
ஜெனரல் காசெம் சுலைமானின் இறுதி ஊர்வலத்திற்கு அந்நாடே திரண்டு அஞ்சலி செலுத்தியதும், அந்நாட்டின் அதிபர் கண்ணீர் சிந்தி ஜெனரலின் இறுதி நிமிடத்தில் பேசியதும் உலக நாடுகளை உற்று நோக்க வைத்தது. இதற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் எவ்வித காரணமும் இன்றி போலீசாரால் பொதுவெளியில் கழுத்தில் முழங்காலால் அழுத்தி கொலை செய்யப்பட்டார்.
ஈரான் அதிபர் சையத் அலி கொமேனி, முன்னாள் அதிபர் அயதுல்லா கொமேனியின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரை எடுத்துக்காட்டாக கூறி இதே போல் தான் உலக மக்கள் முன்னிலையில், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, வியட்னாம் என பல்வேறு அரசுகளை நசுக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசின் உண்மையான முகத்தை அந்நாட்டு மக்கள் இப்போது தான் பார்க்க துவங்கியுள்ளார். அந்நாட்டு கறுப்பினத்தவர்களை மட்டும் இல்லாமல் உலக நாடுகளில் வளர்ந்து வரும் சிறிய நாடுகளை அமெரிக்க அரசு இப்படி தான் நசுக்கும்.
தற்போது அமெரிக்காவில் 'I CAN'T BREATHE' என்ற வாசகம் பரவி வருகிறது. இந்த வாசகம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தருக்கு மட்டும் இல்லாமல், அதேபோல் அமெரிக்க அரசால் நசுக்கப்பட்ட நாடுகளின் குரலையும் தான் அமெரிக்க மக்கள் 'I CAN'T BREATHE' என முழங்கி வருவதாக, ஈரான் அதிபர் சையத் அலி கொமேனி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
