அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை... 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கலக்கத்தில் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Dec 24, 2019 12:57 AM

நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையால் சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. ஐடி, தனியார் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை, சேவை நிறுவனங்கள் என பல்வேறு துறைகளையும் இந்த வேலையிழப்பு ஆட்டிப்படைத்து வருகின்றது.

Cognizant to layoff 350 employees and cut costs says Report

அந்தவகையில் காக்னிசென்ட் நிறுவனம் அதிக சம்பளம் வாங்கும் 350 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 80 லட்சத்தில் இருந்து 1.2 கோடி வரை சம்பளம் வாங்கும் சீனியர் லெவல் அதிகாரிகளை  அந்நிறுவனம் வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வண்ணம் இந்த சிக்கன நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாம். இத்தகவலை காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கரென் மெக்லாலின் உறுதி செய்துள்ளார். செலவைக் குறைக்க இன்னும் சில நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : #JOBS