VIDEO : 2001'ல காலாவதியான 'மாஸ்க்' யூஸ் பண்றோம்... நீங்க சுத்த 'வேஸ்ட்'... அதிபரை நேரடியாக விமர்சித்த 'செவிலியர்'... பரபரப்பு 'நிமிடங்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிகமாக பாத்திக்கப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸில் இருந்து விடுபட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பாரீஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆய்வு செய்ய வேண்டி சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிபருடன் நேருக்கு நேர் நின்று விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாரீஸில் உள்ள அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கான போதிய சம்பளமும் சரிவர கிடைக்கவில்லை என்பதும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதும், மற்ற மருத்துவ உபகரணங்கள் இல்லை என்பதும் தான் அவர்களின் குற்றச்சாட்டு.
இதனால் அதிபர் அங்கு வருகை வந்ததும் அவரை சூழ்ந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அரசு தங்களை காப்பாற்றாது என நேரடியாக குற்றஞ்சாட்டினர். அதிபர் முன் பேசிய செவிலியர் ஒருவர், 'நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். இங்கே எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லை. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு காலாவதியான அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு நாங்கள் ஏன் இன்னும் வேலை செய்ய வேண்டும்?. இனி உங்களை நம்ப போவதில்லை' என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அதிபர், 'கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு சம்பள உயர்வும், போனஸும் அரசு வழங்கியது' என்றார். அதற்கு அந்த செவிலியர், 'ஆம். நீங்கள் அளித்த போனசை நாங்கள் பெற்றுக் கொண்டோம். ஆனால் உலகிலேயே குறைந்த ஊதியம் பெறும் செவிலியர்கள் கொண்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று' என பதில் கூறினார்.
அதிபரை நேரடியாக எதிர்கொண்ட செவிலியரால் அங்கு சிறிது நேரம் பதற்றம் உருவாகியது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் அதிபர் வாக்குறுதியளித்தார். பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்து அதிபர் இம்மானுவேல் கிளம்பி சென்றார். அதிபருடன் செவிலியர் நேருக்கு நேர் நின்று பேசும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில் பிரான்ஸ் 7 - வது இடத்திலுள்ள நிலையில் அங்கு கொரோனா மூலம் சுமார் 1,79,365 பாதிக்கப்பட்டு 27,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
BRAVO à ces 2 soignantes que #Macron a essayé d'embobiner ce matin à l'hôpital Salpêtrière #Paris .#Covid_19 #coronavirus #deconfinementjour5 pic.twitter.com/db080Eyohb
— Le Général 💎 (@LE__GENERAL) May 15, 2020
