'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 11, 2020 03:50 PM

கொரோனா தனிவார்டில் பணியாற்றிய நர்ஸ் ஒருவர் தனது தாயின் இறுதிச்சடங்கை ‘வீடியோ கால்’ அழைப்பின் மூலம் பார்த்து அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

A nurse weeps over her mother\'s funeral through a video call

ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். என்ற மருத்துவமனையில் ராம்முர்தி மீனா என்பவர் நர்சாக பணியாற்றி வருகிறார்.  அவர் கொரோனா தனிவார்டில் பொறுப்பு நர்சாக பணியல் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய 93 வயது தாயார் மறைந்துவிட்டதாக ஊரில் இருந்து அவருக்கு தகவல் வந்தது. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்து வந்ததால், அவரால் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் மனம் நொந்த அவர், தாயாருக்கு தன்னுடைய தந்தையும், 3 மூத்த சகோதரர்களும் இறுதிச்சடங்கு செய்ததை, செல்போன் ‘வீடியோ கால்’ அழைப்பின் மூலம் பார்த்து கதறி அழுதார். இதனைக் கண்ட மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.