நீங்க 'நெனைக்குற' மாதிரி இல்ல... உண்மையாவே 'சீனாவுல' கொரோனா பாதிச்சவங்க... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | May 17, 2020 07:24 PM

சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாடு அறிவித்த பின்னரும் அங்கு கொரோனா பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இதனால் மீண்டும் பரிசோதனை முறைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

China may have 640,000 Coronavirus cases instead of 84,000

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 6,40,000 என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த புள்ளிவிவரங்கள் தற்போது கசிந்துள்ளதால் உலக நாடுகள் பலவும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஆனாலும் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு புள்ளிவிவரத்தில்  சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.