H1B அல்லது J2 விசாவிலுள்ள 'இவர்களுக்கெல்லாம்' கிரீன் கார்டு... 'இந்தியர்கள்' அதிகம் 'பயன்' பெறலாம் எனத் 'தகவல்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 09, 2020 05:21 PM

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கிடைக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

US Legislation Over Green Cards To Nurses Doctors On H1B J2 Visa

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பால் மருத்துவ பணியாளர்கள் இடைவிடாது பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில்  அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கிரீன் கார்டுகளை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு வழங்குவதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளை சேர்ந்த 25000 செவிலியர்களுக்கும், 15000 மருத்துவர்களுக்கும் நிரந்தர குடியுரிமை கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனா பதிப்பால் நிலைகுலைந்துள்ள அமெரிக்காவின் மருத்துவ தேவைகளை ஈடுகட்ட இந்த திட்டம் உதவும் என எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் அமெரிக்காவில் பணிபுரிந்துவரும் இந்தியாவை சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் பெரிதும் பயனடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.