'குண்டா' இருக்குறவங்கள 'கொரோனாவுக்கு'ரொம்ப 'பிடிக்குமாம்...' 'உடற்பருமன்' கொண்டவர்கள் 'ஜாக்கிரதை'...! 'புதிய ஆய்வில் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 09, 2020 08:30 PM

உடற்பருமனோடு இருப்பவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

People who are obese are more likely to be affected by corona

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஆகியோருக்கு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தோல் நோய் நிபுணர் மற்றும் மருத்துவப் பேராசிரியர் ஜீன் ப்ராங்காய்ஸ் டெல்ப்ரைஸி கூறுகையில், உடற்பருமனோடு இருப்பவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்காவில் 42.4 சதவீதம் பேர் உடற்பருமனோடு உள்ளவர்கள் என்ற தகவல் தற்போது வெளி வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃப்ளூ வைரஸ் தாக்கம் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் அதிகமாக காணப்பட்டது. அப்போது இன்புளுயன்ஸா வைரஸ் உடற்பருமனாக இருந்தவர்களையே அதிகமாகத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

சராசரி உடல் எடை, பிஎம்ஐ அளவைக்காட்டிலும் அதிகம் கொண்டவர்கள்  இந்த காலத்தில் சமூக விலகலை கடைபிடித்து மிக கவனமாக இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் மிச்சிகன் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வில் உடற்பருமனானவர்கள் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபட நீண்ட நாட்கள் ஆகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட எச்-1 என்-1 ப்ளூ பேன்டமிக் ஆய்வில் உடற்பருமனான புளூ நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கை சராசரியைவிட இருமடங்காக இருந்தது கண்டிறியப்பட்டது.