VIDEO போட்டியில 'ஜெயிக்கிறது' மாதிரி தெரில.. ரொம்ப நாள் 'ஆசைய'.. தீத்துக்கிட்ட மாதிரி இருக்கு!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Nov 12, 2019 01:36 PM
சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கும். நாமும் பார்த்து சிரித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம். திடீரென பார்த்தால் அந்த வீடியோவை நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான பேர் பார்த்து ரசித்திருப்பார்கள்.

அப்படி ஒரு வீடியோ தான் இது. கல்யாண வீடொன்றில் ஜாலியான போட்டியொன்று நடைபெறுகிறது. கணவர்கள் அங்கிருக்கும் சேர்களை உயரமாக அடுக்கி, அடுக்கி வைத்து அதன் மேல் தங்களது மனைவியை தூக்கி அமர வைக்க வேண்டும். சேர்களின் உயரத்தை பொறுத்து வெற்றி பெற்றவர் யார்? என அறிவிக்கப்படும்.
#அடேய்...இதெல்லாம் தப்பு!
"போட்டியில் ஜெயிக்கனும்னு அண்ணனுக்கு அவ்ளோ வெறி.?!"#கொடுமை 😥 pic.twitter.com/CVkADXPBBg
— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) November 11, 2019
இதில் கணவர் ஒருவர் ஆர்வமுடன் தனது மனைவியை தூக்கி அமர வைத்து விளையாடுகிறார். மிகவும் ஆர்வமுடன் விளையாடும் அவர் கடைசியில் மனைவியை தூக்க முடியாமல் கீழே போட்டு விடுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப நாள் ஆசையை மனுஷன் தீர்த்துக்கிட்டாரு போல என்று கிண்டலடித்து வருகின்றனர்.
