இனிமேல் 'அந்த தடை' இல்ல...! 'இந்தியர்களுக்கு' செம 'ஹேப்பி' நியூஸ்...! - ஜோ பைடன் அரசு அறிவித்த 'முக்கிய' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் இருக்கும் எச்-1 பி விசா மற்றும் எச்-4' விசா உள்ளவர்களுக்கு புதிய நடைமுறைகளை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் நபர்களுக்கு எச்-1 பி விசா வழங்கப்படும். அதோடு அவர்களின் மனைவியோ, கணவரோ அல்லது 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படும்.
இந்தியர்களை பொறுத்தவரை பலர் தங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் பலர். ஆனால், அமெரிக்காவின் சென்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், எச்-1 பி விசா மற்றும் எச்-4 விசாக்கள் வழங்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எச- 4 விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. இதனால் பலர் அமெரிக்காவில் தங்கள் வேலையை இழந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி ஏற்றதிலிருந்து, டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்த பல உத்தரவிற்கு தடை விதித்து வருகிறார்.
அதன்படி, எச்-1 பி விசாவில், அமெரிக்க வருவோரின் மனைவி அல்லது கணவன் மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எச்-4 விசாவை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

மற்ற செய்திகள்
