நாம வாழுற 'காலத்துல' தான் 'இப்படி'யெல்லாம் நடக்குதா...? 'ஃபோட்டோல பாக்குறப்போவே ரொம்ப வேதனையா இருக்கு...' - உருக வைக்கும் நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருக்கும் அசாதாரமான சூழல் காரணமாக மக்கள் பரிதவித்து நிலையில், குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாக இருந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றிய நிலையில், அங்கிருக்கும் மக்கள் பலர் ஆப்கானை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலம் திரும்பி கொண்டு வரும் பணிகளில் உள்ளது. ஆப்கான் மக்கள் பலர் அவ்வாறு செல்லும் விமானங்களில் இறக்கை, சக்கரப் பகுதிகளில் பயணம் செய்யும் வீடியோ கடந்த வாரத்தில் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உயிருக்கு பயந்து காபூல் விமான நிலையத்தில், சிலர் தடுப்புகளை தாண்டி தப்பித்து வருகின்றனர். ஒரு விமானத்திற்குள் அளவிற்கு அதிகமான மக்கள் குவியலுடன் நெருக்கமாக கீழே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி நெஞ்சை நடுங்க வைக்கும் விதமாக இருந்தது. இந்த நிலையில் அங்குள்ள குழந்தைகளின் நிலை இன்னும் மோசம். பெற்றோர்களை இழந்து பிஞ்சு குழந்தைகள் கதறுவது ஈரக்குலையை நடுங்க வைக்கும் விதமாக உள்ளது.
இந்த நிலையில், கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் காபூல் விமான நிலையத்தின் கம்பி வேலிக்கு அப்பால் நின்றுக் கொண்டிருந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க வீரர்களிடம் குழந்தை ஒன்று ஒப்படைக்கப்படுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது காண்பவரின் நெஞ்சை கனக்க வைக்கும் விதமாக உள்ளது.

மற்ற செய்திகள்
