இப்படியொரு 'ராக்கெட்' லாஞ்சரா...! 'இனி எவனாச்சும் நம்மள நெருங்கட்டும், அப்புறம் இருக்கு...' - வயித்துல புளிய கரைக்குற மாதிரி 'மாஸ்' சம்பவம் செய்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக எந்த ஏவுகணை பரிசோதனையும் நடத்தாத வடகொரியா தற்போது செய்துள்ள செயல் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியா சோதனை செய்த இந்த நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வட கொரிய அரசு, 'நாம் இப்போது பரிசோதனை செய்துள்ள ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்தது. இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம். இந்த ஏவுகணை நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மற்றொரு பயனுள்ள தடுப்பு வழிமுறை' எனக் குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய ஆய்வாளர்களும் அவர்கள் சோதனை செய்த ஏவுகணை குறித்து குறிப்பிட்டுள்ளனர். அதில், 'இது நம் வடகொரிய நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணை, அதோடு இது அணு ஆயுதத்தைக் கொண்டு செல்லக் கூடியது' எனவும் தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அமெரிக்க ராணுவமும், 'வடகொரியாவின் ஏவுகணை சோதனை அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலானது' என தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
