என்னங்க இது அநியாயம்...? 'நம்ம ஊர்ல ரோட்டு சைடுல சும்மா கெடக்கும்...' 'அத போய் ரூ.1,800-க்கு ஆன்லைன்ல விக்குறாங்க...' - அதுக்கு புதுசா 'பெயரு' கூட வச்சிருக்காங்களாம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தமிழகத்தில் இலவசமாக சாலையோர மரங்களில் கிடைக்கும் வேப்பங்குச்சியை அமெரிக்காவில் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று ரூ.1,800-க்கு விற்பனை செய்து வருகிறது.
முன்பெல்லாம் வேப்பங்குச்சியிலும், உப்பிலும் பல் துலக்கிய போது, ப்ரஷ், டூத்பேஸ்ட் என்று விளம்பரம் செய்து வந்தனர். சரி அது தான் நாகரிகம் என அனைவரும் மாறிய போது தீடிரென 'உங்க டூத்பேஸ்ட்டில் உப்பிருக்கா?' என கேட்க ஆரம்பித்தனர்.
தமிழகத்தின் கிராமங்களில் பெரும்பாலும் பல் துலக்க வேப்பங்குச்சியை பயன்படுத்துவது வழக்கம். இயற்கையாகவே வேப்பங்குச்சி பற்களில் உள்ள கிருமிகளை அகற்றுவதோடு, பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கும்.
பொதுவாகவே இந்தியாவின் முக்கிய மூலிகைகளில் ஒன்றாக இருக்கும் வேப்பமரத்தில் அதன் இலை, காம்பு, பூ, மரப்பட்டை என அனைத்தும் மருந்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் அருமை தெரிந்த அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று வேப்பங்குச்சியை இந்திய மதிப்பில் சுமார் 1,800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் வேப்பங்குச்சியை 'ஆர்கானிக் டூத்பேஸ்ட்' என்று குறிப்பிட்டு விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.