நிம்மதியா படுத்து தூங்கணும்னு ஆசை இருக்கா...? இருந்துச்சுன்னா 'அத' மட்டும் பண்ணாதீங்க...! - அமெரிக்காவை எச்சரித்த வடகொரிய அதிபர் கிம்மின் தங்கச்சி...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அதிபரின் தங்கையான கிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் பெரும் ஆதிக்கத்தை செலுத்திவரும், வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், உலகின் மிகவும் மர்மம் நிறைந்த வடகொரிய நாட்டிற்கும் பல ஆண்டுகளாகவே சரியான சூழல் இல்லாதது உலகறிந்தது. இந்நிலையில் இரு நாடுகளும் எப்போது மோதிக்கொள்ளும் என்ற அச்சம் உலகநாடுகளுக்கு இருக்கும்.
இந்நிலையில், வடகொரியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில் வடகொரிய அதிபரான கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சம்பவம் ஏனைய பிற உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அந்நாட்டில் கிம்முக்கு அடுத்து மிகவும் சக்தி வாய்ந்த நபராக அறியப்படுகிறார்.
அந்நாட்டில் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ள கிம் யோ ஜாங் கூறியதாவது, 'நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு வருடங்களில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது' என கூறியதாக வடகொரிய ஊடகங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளன.

மற்ற செய்திகள்
