ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா (America), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் பிரிட்டன் (UK) ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சீனாவை (China) எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள உடன்படிக்கை ஒன்றை அறிவித்துள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் இந்த திடீர் உடன்படிக்கைக்கு காரணம் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் ஆகும்.
மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு, மூன்று நாடுகளும் ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடும் தங்களின் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டத்தின் முதல் முயற்சியாக அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கஸ் கூட்டுத் திட்டத்தை குறித்து கூறியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ' இப்போது இணைந்துள்ள இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள். இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருக்கிறது. இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும், மக்களைக் காக்கவும் இன்றியமையாதது' எனத் தெரிவித்துள்ளார்.
ஆக்கஸ் கூட்டுத் திட்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா இதுகுறித்து கூறுகையில், 'ஆஸ்திரேலியா அணு ஆயுதமற்ற நாடாக இருக்கும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறது' என திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் எச்எம்எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட போது அதில் அமெரிக்க உபகரணங்களும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.