ஏன்டா... எப்போவும் 'எங்க' கிட்டயே வந்து 'சரசம்' பண்றீங்க...? 'ஒரு அளவுக்கு தான் பொறுக்க முடியும்...' - கோபத்தில் 'கொந்தளித்த' சீனா...!
முகப்பு > செய்திகள் > உலகம்தைவான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இனியாவது அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
கடந்த 1949-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த உள்நாட்டு போரில் சீனாவும் தைவானும் பிரிந்தது. ஆனால் , சீனா இன்றளவும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.
அதோடு, தைவான் சீனாவின் ஒரு பகுதி இல்லையென்று கூறினால் மீண்டும் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்காது என சீனா மிரட்டி வருகிறது.
மேலும், தைவான் தங்கள் கடற்பரப்பு வழியாக பன்னாட்டு கப்பல்கள் செல்ல அனுமதித்தால் சீனா தன்னுடைய கைவரிசையை காட்டும் என ஏற்கனவே கூறியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவோ தைவானுக்கு துணையிருக்கும் விதமாக அடிக்கடி கடற்பரப்பு வழியாக தனது போர்க் கப்பல்களை இயக்கி சீனாவை எச்சரித்து வருகிறது .
இதனால் கடுப்பான சீன ராணுவ அமைச்சகம் அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'தைவான் கடற்பரப்பில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நுழைந்ததற்கு நாங்கள் உறுதியான எதிர்ப்பையும் கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.
இனியாவது அமெரிக்கா அடுத்த நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க கூடாது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தைவான் கடற்பரப்பின் அமைதி மற்றும் உறுதித்தன்மையை கெடுக்கும்' எனக் கூறிப்பிடப்பட்டுள்ளது.