'என்ன' செய்யணுமோ 'அத செஞ்சிட்டு' தான் கிளம்பியிருக்கோம்...! தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் வாய்ப்பே இல்ல ராஜா...! - 'நாங்க'லாம் அப்போவே அப்படி...!
முகப்பு > செய்திகள் > உலகம்காபூலில் தாலிபான்களால் பயன்படுத்த முடியாத வகையில் போர் விமானங்களை இயக்க முடியாமல் செய்து விட்டதாக என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு , அங்கிருந்த அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் போன்றவற்றை இயக்க முடியாத அளவிற்கு செய்து விட்டதாக, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி கூறியுள்ளார்.
இந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது என்றும் தாலிபான்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் கிட்டத்தட்ட ஆறாயிரம் அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர் என தெரிவித்தார். அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 லட்சம் டாலர் மதிப்புடைய 70 ராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 Humvees ராணுவ டிரக்குகளையும் செயல்படாதவாறு மாற்றி விட்டனர் என கூறினார்.
அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு அத்தியாவசியம் என்பதால், ராக்கெட் எதிர்ப்பு கருவியான C-RAM மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டது. ஆனால் கிளம்புவதற்கு முன்பாக அதையும் செயலற்றதாக மாற்றிவிட்டு தான் கிளம்பினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
