நான் 'உயிரோட' தான் இருக்கேனா...! 'சத்தியமா என்னால நம்ப முடியல...' 'திமிங்கலத்தின்' வாய்க்குள் இருந்த 'திக் திக்' நொடிகள்...! - என்ன நடந்தது...?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்-ன் கேப் காட் (Cape Cod, Massachusetts) கடலில் மைக்கேல் பக்கார்ட் (56) என்பவர், கடலுக்குள் 45 அடி ஆழத்தில் சென்று, ஆக்சிஜன் கருவிகளுடன் லோப்ஸ்டர் இறால் மீன்களை பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அங்கே வந்த திமிங்கலம் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் அவரை விழுங்கியது. சுறாவால் தான் தாக்கப்பட்டோமா என அவர் நினைத்த வேளையில், தம்மை பிடித்த விலங்கிற்கு பற்கள் இல்லை என்பதை உணர்ந்த அவர் தாம் திமிங்கலத்தின் வாயில் மாட்டிக்க் கொண்டதை புரிந்து கொண்டார்.
சுமார் 40 விநாடிகள் கும்மிருட்டில் அவ்வளவு தான் கதை முடிந்தது என திமிங்கலத்தின் வாய்க்குள் இருந்துள்ளார். திடீரென நீருக்கு இருந்து வெளியே வந்த திமிங்கலம், தலையை அங்கும் இங்கும் அசைத்து அவரை வேகமாக உமிழ்ந்தது.
உடலில் சிறிய சிராய்ப்புகளுடன் விழுந்த அவரை அருகிலிருந்த மீன்படகில் இருந்தவர்கள் மீட்டு முறையான முதலுதவி அளித்தனர். திமிங்கலத்தின் வாயில் சிக்கிய பிறகும் தற்போது உயிரோடு இருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பக்கார்டின் அனுபவம் உண்மையாகத்தான் இருக்கும் என மசாசூட்ஸ் திமிங்கல கடல் ஆய்வு துறை இயக்குநர் ஜூக் ராபின்ஸ் கூறியுள்ளார். திமிங்கலங்களுக்கு மிகப்பெரிய வாய் உண்டு என்றாலும், மனிதர்களை விழுங்கும் அளவுக்கு அதன் தொண்டைக்குழி பெரிது அல்ல. எனவே தான் பக்கார்ட் உயிருடன் தப்பியுள்ளார் என அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
