'5 வயசுக்குள்ள' இருக்குற குழந்தைங்க 'மாஸ்க்' போடணுமா...? - சுகாதார சேவைகள் இயக்குநரகம் 'வெளியிட்டுள்ள' நெறிமுறைகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.

புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக வருவதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் தற்போது பொதுமக்களிடம் அதிகமாகி உள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..
இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அந்த நெறிமுறையில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் மாஸ்க் அணியலாம்.
மேலும், பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என அந்த நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது..

மற்ற செய்திகள்
