‘முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு’!.. இளம் விக்கெட் கீப்பருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்.. பிசிசிஐ வெளியிட்ட லிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுடன் இந்தியா வெளியேறியது. இந்த சூழலில் நியூஸிலாந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் நவம்பர் 17-ம் தேதி டி20 போட்டி தொடங்குகிறது. இதனை அடுத்து நவம்பர் 25-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று (12.11.2021) வெளியிட்டுள்ளது. இதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஹானே கேப்டனாக இந்திய அணியை வழி நடந்த உள்ளார். ஆனால் முதல் போட்டிக்கு மட்டுமே ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி அணிக்கு திரும்பி விடுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பட்டியலில் கே.எஸ்.பரத், ஜெயந்த் யாதவ், பிரஷித் கிருஷ்ணா ஆகிய இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பரத்துக்கு நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. பல டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் ரிசர்வ் வீரராக சென்றுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த கே.எஸ்.பரத், ரஞ்சி டிராபி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ரஞ்சி டிராபியில் 300 ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.